தகவலுக்கு நன்றி - பாலாஜி விஸ்வநாதன்.
இன்றைய ஸ்மார்ட் போன் டிஜிட்டல் யுகம், உணவு கலாச்சார மாற்றங்கள் போன்றவை மலம் கழித்தலில் பிரச்சனைகள், கோளாறுகளை உண்டாக்குகின்றன. மலம் கழித்தலில் உண்டாகும் பிரச்சனைகள் உங்கள் ஆரோக்கியத்தை மெல்லே, மெல்ல கரையான் போல அரிக்க துவங்கும் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
காலை நீங்கள் கண்விழித்த உடன் முதல் வெளியாக செய்ய வேண்டியது மலம் கழிப்பது தான். ஒருவேளை மலம் கழிப்பதில் சிரமமாக உணர்ந்தால், ஒரு கப் காபி, இதமான சுடுதண்ணி, சுடுதண்ணியில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது போன்றவற்றை முயற்சி செய்யலாம்.
ஒருவேளை காலை வேளையில் மலம் கழிக்க முடியவில்லை, வரவில்லை, முயற்சித்தாலும் சிரமமாக இருக்கிறது எனில், கவலைப்பட வேண்டாம். தினமும் நீங்கள் சரியான நேரத்தில் மலம் கழிக்கிறீர்கள் என்றாலே நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்
சிலருக்கு 8 மணிக்கு, சிலருக்கு காலை சிற்றுண்டி கழித்த அரைமணிநேரம் கழித்து, சிலருக்கு அலுவலகம் சென்ற பிறகு கூட மலம் கழிக்க வரலாம். தினமும் ஒரே நேரத்தில் நீங்கள் சீராக மலம் கழித்தல், உங்கள் குடல் இயக்கம் சீராக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இதை ஆங்கில மருத்துவ முறையில் கோல்டன் ரூல் என்றும் குறிப்பிடுகின்றனர்.
ஒரு நாளைக்கு இரண்டில் இருந்து மூன்று முறை வரை மலம் கழித்தல் இயல்பு. இரண்டு நாளுக்கு ஒருமுறை அல்லது ஒரே நாளில் ஐந்து முறைக்கும் மேல் மலம் கழிக்க செல்லுதல் போன்றவை உங்கள் குடல் இயக்கம் மற்றும் செரிமானத்தில் ஏதோ மாற்றங்கள் உண்டாவதை உணர்த்துபவை. எனவே, உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.