Ads Area

மீண்டும் ஏற்படவுள்ள அதிரடி;குழப்பத்தில் ரணில் தரப்பு.


அடுத்து வரும் சில நாட்களில் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது. இதன்போது முக்கிய அமைச்சு பதவிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நாளை அல்லது நாளை மறுதினம் நியமிக்கப்படவுள்ளது. 

இதன்போது பிரதான அமைச்சர் மற்றும் இராஜாங்க பதவிகள் பலவற்றை தனக்கு கீழ் கொண்டு வருவதற்கு ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களினால் இந்த அறிவுத்தல் ஜனாதிபதிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது. இதன் காரணமாக தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படலாம்.இதன் காரணமாக தேசிய பாதுகாப்பு அமைச்சு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு, ஊடக அமைச்சு உட்பட முக்கிய சில அமைச்சுக்களை ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டின் கொண்டு வர வேண்டும். 

மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்காக மாகாண சபை அமைச்சினையும் பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறான நிலைமையின் கீழ் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாதெனவும், தேர்தலை பிற்போட்டு அரசியல் பழிவாங்கல்களை மேற்கொள்ள ஐக்கிய தேசிய கட்சிக்கு முடியாமல் போகும் என அந்த பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்னர்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe