ஏறாவூரைச் சேர்ந்த அஹமட் முஹமட் - என்ற சகோதரரின் எண்ணத்தில் உருவான சிறந்த ஒரு சமூக சேவை அமைப்புதான் “மத்திய கிழக்கு வாழ் உதவும் கரங்கள்” என்ற அமைப்பு.
இவ் அமைப்பானது கட்டார், சவுதி, குவைத், ஓமான், டுபாய் போன் வளைகுடா நாடுகளில் பல கிளைகளாக பிரிந்து தங்களால் முடியுமான உதவிகளை ஏழை-எளியவர்களுக்கு செய்து வருகின்றார்கள்.
இவ் அமைப்பானது வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இலங்கைச் சகோதர்களை வாட்ஸ்அப் குழுமம் ஊடாக ஒன்றினைத்து அந்தந்த நாடுகளில் குழுக்களை அமைத்து அவர்களில் தலைவர், பொருளாளர், செயலாளர் என்பவர்களையும் நியமித்து பிரதேச பாகுபாடு, ஊர்ப்பாகுபாடு, இனப் பாகுபாடு என்று பாராது அனைத்து உறுப்பினர்களினுாடாகவும் நிதிகளை திரட்டி தங்களால் ஆன உயரிய பணியை செய்து கொண்டு வருகின்றனர்.
தொடர்பு இலக்கங்கள் அனைத்தும் படத்தில் தரப்பட்டுள்ளது.
அமைப்பின் நிறுவனர் சகோதரர் - ஏறாவூரைச் சேர்ந்த அஹமட் முஹமட்