நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியிருந்து விலகவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே மஹிந்தானந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்னும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்புரிமையிலிருந்து விலகவில்லையென்றும் அவரது மாதாந்த சம்பளத்தில் 3000 ரூபாய் கட்சியின் நிதியத்துக்கு ஒதுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் போஷகராக கடமையாற்றுவதால் அவர் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்தானந்த தெரிவித்துள்ளார்.