இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் உள்ள பல்கலைக் கழகங்களில் உள்ள தனியானதொரு பீடத்திற்கென நான்கு வழிபாட்டு ஸ்தலங்களும் அமையப்பெற்றிருக்கும் முதலாவது பீடம் சம்மாந்துறையில் உள்ள பிரயோக விஞ்ஞானபீடமாகும்.
இங்கு கல்வி கற்கும் அனைத்து இன மாணவர்களும் தங்களது மத அனுஸ்டானங்களை மேற்கொள்ளும் வண்ணம் அணைத்து மத வழிப்பாட்டுத் தளங்களும் அமையப் பெற்றுள்ளது இந்துக்களுக்கான சிறிய இந்துக் கோயில், முஸ்லிம்களுக்கான பள்ளிவாசல், பௌத்தர்களுக்கான சிறிய விகாரை அதனோடு சேர்த்து தற்போது கிறிஸ்தவ மாணவர்களுக்கான சிறிய தேவாலயமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள பல்கலைக்கழங்களில் எல்லா மத வழிபாட்டு ஸ்தலங்களும் அமையப் பெற்ற முதலாவது பீடம் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞானபீடமாகும்.
குறித்த ஒரு சாரார்தான் அங்கு படிக்க வேண்டும், குறித்த ஒரு சாராரின் மத அனுஸ்டானங்கள்தான் அங்கு பின்பற்றப்பட வேண்டும் என்பதற்கு அப்பால் இப் பல்கலைக்கழகமானது சகலருக்கும் சொந்தமான, சகல மாணவர்களும் கல்வி கற்பதற்கான ஒரு பீடமாக இருப்பது இன ஒற்றுமைக்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.