சவுதி அரேபியாவில் பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றுச் சென்று கொண்டிருந்த சாரதி ஒருவர் மயக்கமுற்று நிலைதடுமாறிய போது அந்த பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்த பல்கலைக்கழ மாணவி ஒருவர் தைரியமாக பஸ்ஸிசை ஓட்டிச் சென்று பயணிகளைக் காப்பாற்றிய சம்பவம் ஒன்று சவுதி அரேபியாவில் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
அஷ்வாக் அல்-ஸம்றி என்ற சவுதி அரேபிய அல்-கைல் பல்கலைக்கழத்தில் பயிலும் மாணவியும் இன்னும் பல மாணவிகளும் பல்கலைக்கழத்தில் இருந்து வீடு நோக்கி மினி பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்த போது பஸ்ஸின் சாரதிக்கு மூளைப் பாதிப்புக் காரணமாக மயக்கம் ஏற்பட்டிருக்கின்றது இதனால் நிலை தடுமாறிய சாரதி தன்னால் இனிமேல் வாகணத்தை செலுத்த முடியாதுள்ளது எனக் கூறி மயங்கிய போது உடனே தைரியமாக வாகணத்தை ஓட்டிச் சென்று சாரதியை வைத்தியசாலையில் அனுமதித்ததோடு பஸ்ஸில் பயணம் செய்த ஏனைய மாணவிகளையும் காப்பாற்றியுள்ளார் அஷ்வாக் அல்-ஷம்றி என்ற அந்த சவுதி மாணவி.
சுமார் 50 கிலோமீட்டர் துாரம் வரை தைரியமாக வாகணத்தை ஓட்டிச் சென்று சாரதியையும், பஸ்ஸில் பயணம் செய்த ஏனைய மாணவிகளையும் காப்பாற்றிய அம் மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமுள்ளன.
இது தொடர்பாக மாணவியின் தந்தை ஊடகங்களுக்கு கருத்துச் தெரிவிக்கையில் “தனது மகளின் தைரியத்தை பாராட்டுவதாகவும், தனது மகளுக்கு வீட்டிலேயே வாகணம் ஓட்டக் கற்றுக் கொடுத்ததாகவும், அவர் கற்றுக் கொண்டவை இன்று மிகவும் பயணளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.