Ads Area

மிக பகட்டாக திருமணம் செய்துக் கொள்ளும் தம்பதிகளுக்கு மத்தியில் விவாகரத்துக்கள் அதிகம்.

பல திருமணங்கள் விவாகரததில் முடிவடைவதற்கு சிலரது சுபாவம், நீங்கள் திருமணம் செய்யும் விதம் போன்றனவும் காரணமாக இருக்கலாமாம்.

எந்த வயதில், எந்த செலவில் என ஆரம்பித்து, ஒருவரின் எண்ணங்கள் கொண்டு கூட அவரது திருமணம் விவாகரத்தில் தான் முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

28 - 32 வயது.

28 - 32, இந்த இடைப்பட்ட வயதில் திருமணம் செய்துக் கொள்ளும் தம்பதிகள் தான் அதிகம் ஐந்து ஆண்டுகளுக்குள் விவாகரத்து செய்கின்றனர் என கடந்த ஆண்டு உட்டா பல்கலைக்கழகத்தில் வெளியான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகட்டுத் திரமுணங்கள்.

மிக பகட்டாக திருமணம் செய்துக் கொள்ளும் தம்பதிகளுக்கு மத்தியில் அதிகமாக விவாகரத்து ஆகிறது என 2014-ம் ஆண்டு எமோரி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுத்தமற்றவர்கள்!

செய்யும் வேலையில் சுத்தமற்றவர்கள், வீட்டை குப்பை மேடு போல வைத்துக் கொள்ளும் பழக்கம் இருப்பவர்கள் மத்தியிலான திருமணம் விவாகரத்தில் அதிகமாக முடிகிறது என கடந்த 2007-ம் ஆண்டு பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளும் தம்பதிகளில் 62% பேரின் இல்வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கிறதாம்.

தேனிலவு!

எமோரி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், திருமணம் முடிந்து தேனிலவு செல்லும் தம்பதிகள் மத்தியில் 41% விவாகரத்து எழுவதற்கான வாய்ப்புகள் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்மறை விமர்சனம்!

கடந்த 1986-ம் ஆண்டு உளவியலாளர் ஜான் காட்மேன் மற்றும் அவரது மனைவி நடத்திய ஆய்வில், நேர்மறை எண்ணங்கள் அதிகமாக இருக்கும் தம்பதிகள் மத்தியில் விவாகரத்து ஏற்படும் அளவு 50% குறைவாக இருப்பதாகவும், எதற்கு எடுத்தாலும், எதிர்மறையாக பேசுவதும், விமர்சிப்பதும் என இருக்கும் தம்பதிகள் தான் விவாகரத்து செய்துக் கொள்ள முனைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe