ஐந்து பிள்ளைகளும் தாயும் கணவருக்கு நீதிகோரி நடுவீதியில் உணவு தவிர்ப்பு போராட்டம்.
கடந்த 29.11.2018 அன்று வவுனதீவு பொலிஸ் காவலரணில் வைத்து இரண்டு பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு படுத்தி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் கதிர்காமத்தம்பி-இராசகுமாரன் (அஜந்தன்) என்பவரை மூன்று மாதங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கான விசேட அனுமதியைப் பெற்று தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும் இவரால் பொலிசார் சுட்டுக்கொல்லப்படவிலலை என்ற விடயத்தை உறுதிப்படுத்திய புலனாய்வுப் பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு பட்டவரை அடையாளம் காட்டுமாறு கேட்டே தடுத்து வைத்துள்ளனர்.
எந்த விபரமும் தெரியாத தன் கவணரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் அவரை உடனடியாக பிணையிலாவது விடுதலை செய்ய வேண்டும், அல்லது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் முற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இரண்டு மாத கைக்குழந்தை உட்பட ஐந்து பிள்ளைகளும் தாயும் இன்று காலையிலிருந்து மட்டக்களப்பு நகர் காந்திப்பூங்காவில் கணவருக்கு நீதி கிடைக்கும்வரை உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்.