காரைதீவு நிருபர் சகா
சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையில் பிரதிக்கல்விப்பணிப்பாளாராக கடந்த 09ஆண்டுகள் கடமையாற்றிய செல்லத்துரை புவனேந்திரன் இன்று(2) புதன்கிழமை கல்முனை வலயக்கல்விப்பணிமனையில் கடமையை பொறுப்பேற்றவுள்ளார்.
கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சின் உத்தரவின்பேரில் இவருக்கான இடமாற்றக்கடிதம் கடந்தவாரம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
கல்முனை வலயக்கல்விப்பணிமனையின் நிருவாகத்திற்கான பிரதிக்கல்விப்பணிப்பாளராக அவர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்பார்.
விஞ்ஞானப்பட்டதாரியான இவர் சிறந்ததொரு நிருவாகியாவார். சம்மாந்துறை வலய கல்விசார் உத்தியோகத்ர்கள் நலன்புரி அமைப்பு பிரியாவிடை நடாத்துவதற்கான ஒழுங்குகளைமேற்கொண்டிருப்பதாக தலைவர் எம்.எ.சபூர்தம்பி தெரிவித்தார்.