(காரைதீவு நிருபர் சகா)
காரைதீவுப்பிரதேசத்தில் இம்முறை வெளியான க.பொத உயர்தரப்பெறுபேறுகளின்படி இதுவரை இரண்டு மாணவர் வைத்தியத்துறையிலும் இரண்டு மாணவிகள் பொறியியல் துறையிலும் தெரிவாகி சாதனைபடைத்துள்ளனர்.
கலைத்துறையில் 3ஏ பெறற விபுலாநந்தா மத்தியகல்லூரி மாணவியான சூரியகுமார் கீர்த்திகா சாதனைபடைத்துள்ளார். இவரதுஅக்கா சூ.கஜாளினி 3ஏ பெற்றுகலைப்பிhவில் சாதனைபடைத்து பல்கலைக்கழகம் சென்றுள்ளார். அவரது தம்பி யதுர்சன் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில். தரம் புலமைப்பரிசில் பரீட்சையில் 164புள்ளிகளைப்பெற்று சாதனை படைத்துள்ளான். இவர் மீனவசமுக மாணவி.
குலேந்திரன் இந்துஜன் மற்றும் சண்முகலிங்கம் குமரன் ஆகிய மாணவர்கள் 2ஏ பி பெற்று மாவட்டத்தில் 7ஆம் 22ஆம் இடங்களைப்பெற்று மருத்துவத்துறைக்குத் தெரிவாகியுள்ளர்.
நால்வரும் காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் பயின்றவர்களாவர். இதைவிட ஏனையதுறைகளுக்கு சுமார் நூறு மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.
கலைப்பிரிவு மாணவி சூரியகுமார் கீர்த்திகா வீட்டுக்குச்சென்ற காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் பரிசு வழங்கிப்பாராட்டியுள்ளார். மேலும் காரைதீவுப்பிரதேசத்தில் சாதனை படைத்த மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார்.