காரைதீவு நிருபர் சகா
காரைதீவு விளையாட்டுக்கழகத்தினதும் விபுலாநந்த சனசமுக நிலையத்தினதும் வருடாந்த ஒன்றுகூடலும் கழகஇரவும் (29) சனிக்கிழமை கழகத்தலைவர் ஆனந்தன் அமிர்தானந்தன் தலைமையில் நடைபெற்றது.
இவ்வாண்டில் ஹொக்கி வலைப்பந்து மெய்வல்லுனர் கல்வி உள்ளிட்ட சகல
துறைகளிலும் சாதனை படைத்த வீராங்கனைகள் பாராட்டிக்கௌரவிக்கப்பட்டனர்.
கழகப்போசகர்களான முன்னாள் அரச நிலஅளைவயாளர் வே.இராஜேந்திரன் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோருடன் முன்னாள் தலைவர்களான சி.நந்தகுமார் யு.ரஜிநாதன் வி.அருட்குமரன் எஸ்.ரகுநாதன் விளையாட்டு உத்தியோகத்தர் எல்.சுலக்சன் உள்ளிட்டோர் பதக்கங்களை அணிவித்தனர்.
Kapanlagi