சகாதேவராஜா
கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல.எ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று (18) வெள்ளிக்கிழமை காலை அம்பாறைக்கச்சேரிக்கு விஜயம் செய்தார்.
இதன்போது படையினர் வசமிருந்த காணி விடுவிப்புச் செய்யப்பட்ட பத்திரங்கள் கையளிக்கப்பட்டதோடு, அவை அரசாங்க அதிபரிடம் வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கு மாகாண ஆளுநருடன் அவரது செயலாளர் அசங்கஅபேவர்த்தனவும் சமுகமளித்திருந்தார். அதில் அரசஅதிபர் பண்டாரநாயக்க படை உயர் அதிகாரி சகிதம் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

