எதிர்க்கட்சி தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டீ சில்வாவை நியமிக்குமாறு கோரிக்கை . சுதந்திர கடசிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பெயரிடப்பட்டுள்ளார்.எனினும் அவர் பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவம் செய்து வருகிறார்.
இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் ஏற்பட்டுள்ள மோதலை தவர்க்கும் வகையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.அதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட தலைவராக நிமல் சிறிபால டி சில்வாவுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.