(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் புதியதோர் ஆண்டின் ஆரம்பத்தினை உருவாக்குவதற்கான உறுதி மொழியை அண்மையில் மேற்கொண்டனர்.
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு நாட்டின் நிரந்தர சமாதானத்திற்காக உயிர்நீத்த படைவீரர்களுக்காக இரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் புதிய ஆண்டுக்கான உத்தியோகத்தர்கள் சத்தியப் பிரமாணமும், தவிசாளர் மற்றும் செயலாளரின் விசேட உரையும் இடம்பெற்றது.