(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை பிரதேச சபை ஏற்பாடு செய்த வருடாந்த ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும், கலை கலாச்சார நிகழ்வும் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் தலைமையில் நேற்று சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் வீ.ஜெயசந்திரன், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.கே.முஹம்மட், பிரதேச சபை உறுப்பினர்கள், சம்மாந்துறை பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்போது சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்கள், கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.