Ads Area

சம்மாந்துறை அல்-ஹம்றா வித்தியாலயத்தில் இடம் பெற்ற வித்தியாரம்ப விழா.

2019ஆம் கல்வி ஆண்டுக்காக தரம் 1 புதிய மாணவர்களை சம்பிரதாயபூர்வமாக வரவேற்கும் தேசிய நிகழ்வு சகல பாடசாலைகளிலும் நடைபெற வேண்டும் என்ற கல்வி அமைச்சரின் வேண்டுகோளுக்கமைய சம்மாந்துறை அல்-ஹம்றா வித்தியாலயத்திலும் வித்தியாரம்ப விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர்  தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்,  அதிதியாக சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.எம். சஹீல் அவர்கள் கலந்து கொண்டதோடு, புதிய மாணவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் தரம் 1 புதிய மாணவர்களை இன்முகத்துடன் வரவேற்றதோடு, அவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.










Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe