Ads Area

சம்மாந்துறை ஆதார வைத்திய சாலைக்கும் ஒதுக்கப்பட்ட அம்புலன்ஸ் வண்டிக்கு என்ன நடந்தது???


ஏ.ஜே.எம்.ஹனீபா

சம்மாந்துறை ஆதார வைத்திய சாலைக்கும் ஒதுக்கப்பட்ட
அம்புலன்ஸ் வண்டிக்கு என்ன நடந்தது?????? கௌரவ சுகாதார பிதியமைச்சர் பைசால் காசீம் அவர்களே,

நாடலாவிய ரீதியில் சுகாதார அமைச்சினால் வைத்திய சாலையின் தேவை கருதி அம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன இதடிப்படையில் கிழக்கு மாகாணத்திலுள்ள 11 வைத்திய சாலைகளுக்கு இன்றைய தினம் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் சம்மாந்துறை ஆதார வைத்திய சாலைக்கும் 
ஒரு அம்புலன்ஸ் நாமமிடப்பட்டிருந்த நிலையில் அதனை கௌரவ சுகாதார பிதியமைச்சர் பைசால் காசீம் அவர்களால் திட்டமிட்டு வேறு ஒரு வைத்திய சாலைக்கு வழங்கப்படவுள்ளதாக வைத்திய சாலை வட்டாரத்தில் பேசப்பட்டு வருவதுடன் சந்திக்கு வந்து சம்மாந்துறை முழுவதுதும் பேசப்படுகின்றன.

இந்த விடயமாக வைத்திய சாலையின் அபிவிருத்திக் குழு பிரதிநிதிகளை தொடர்பு கொண்டு கேட்கும் போது அவற்றில் உண்மை  இருப்பதாகவும் இது விடயமாக வைத்திய சாலையின் அபிவிருத்திக் குழு பாராளுமன்ற உருப்பினர் கௌரவ எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களை சந்தித்து தெரிவித்ததாகவும் இதுவிடயமாக வைத்திய அத்தியட்சகர் தன்னிடம் தெரியப்படுத்தவில்லை எனவும் இருந்தும் பாராளுமன்ற உருப்பினர் கௌரவ எம்.ஐ.எம்.மன்சூர் பிரதி அமைச்சரை தொடர்பை ஏற்படுத்த பல தடவை முயற்சித்தும் முடியாமல் போனதாகவும் அறிய முடிகின்றன.

இவ்வாறான எமதூரின் அபிவிருத்தி விடயத்தில் கட்சி அரசியலுக்கு அப்பால் சகலரும் இனைந்து பணியாற்ற முன்வர வேண்டும்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe