‘பற்ற வைத்த நெருப்பொன்று பற்றியெரியும்’ தருணம் சம்மாந்துறை வைத்தியசாலைக்குள் உள்நுழைய எத்தணிக்கின்றது. இது விடயத்தை கண்டுகொள்ள சில விடயங்களை கட்டாயம் அலச வேண்டிய காலத்தின் தேவை உள்ளது.
அதாவது, நாம் அனைவரும் அறிந்த ஒரு விடயம் தான் பரப்பிலும், மக்கள் செறிவிலும் அதிகமான சம்மாந்துறை வைத்தியசாலை போதிய வளங்கள் போதாமல் தத்தளிக்கின்ற நிலைமை. இருந்த போதிலும் உள்ளுர் அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்களால் சில தேவைகள் நிவர்த்திக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அவ்வாறு இருப்பினும், அடிப்படையான தேவைகளில் ஒன்றே விஷேட வைத்திய நிபுணர்கள். ஆனால் இத்தேவை குறித்த வைத்தியசாலையில் எந்தளவு இழுபறியில் திண்டாடுகின்றது என்பதை நம்மில் எத்தனை பேர் அறிந்துள்ளோம்.!
தற்போதும் கூட குறிப்பிட்ட சில வைத்தியர்களினதும், நிர்வாகத்தினரது முயற்சியினாலும் வைத்திய நிபுணர் திரு. ஈ.யூ.ஏ. ஏக்கநாயக்க சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு V.O.G. ஆக நியமிக்கப்பட இருந்த போதிலும் திடீரென வெளியான அதிர்ச்சித் தகவல் தான் குறித்த வைத்தியர் தியத்தலாவை வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளமை.!!!
இருப்பினும், வைத்திய நிபுணர் சுதர்சனடி சில்வா குறிப்பிட்ட சில காலம் நிரந்தரமாக பணியாற்றிய போதிலும் பிற்பட்ட காலத்தில் அவர் அம்பாறை வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்று சென்று பின்னர், தற்கால சூழ்நிலையில் வெற்றிடமான சம்மாந்துறை வைத்தியசாலையின் V.O.G. இடத்தினை சேவை நோக்கம் என்ற ரூபத்தில் வாரத்தில் 3 நாட்கள் வருகை தந்து செல்கின்றார்.
உண்மையில் அவரின் சேவை நோக்கத்திற்கு நாம் அனைவரும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம். அப்படியாவது 3 நாட்கள் எமது வைத்தியசாலை இயக்க சுற்றோட்டத்தில் உள்ளது.
எப்படிதான் தற்காலிக வைத்தியர்கள் வந்து சென்றாலும், நிரந்தர ஒருவர் வருவதில் ஏற்படும் தடைகள் என்ன? இதன் மர்மம் என்ன? என அலசிய போது, கிடைத்த சில கூற்றுக்களை இங்கே களையலாம் என என்னுகின்றேன்.
சம்மாந்துறை வைத்தியசாலையை தரம் உயர்த்துவதில் சில அரசியல் கெடுபிடிகள் இருப்பினும் இந் நியமணம் தடுக்கப்பட்டு சாதூரியமாக திருப்புமுனையாக்கப்பட்டதில் பெரும்பாகம் குறித்த நியமனத்தில்; இதர அரசியல்வாதியொருவருக்கு தொடர்பு இருக்கலாம் என அறியமுடிகின்றது.
அதுபோக இன்னுமொன்றை எதிர்வு கூறலாம். அதாவது, அரசியல் ஆப்பை விட ஆபத்தானதே தற்கால வைத்திய வியாபாரம். சில வேளை இந் நியமனம் நர்த்தப்பட்டமை இதுவாகவும் இருக்கக்கூடும்.
இக் கோட்பாட்டின் படி அம்பாறையில் 2 இற்கு மேற்பட்ட V.O.G. இருப்பதனால் தற்போது சம்மாந்துறை V.O.G. வெற்றிடத்தை நிவர்த்தி செய்து கொண்டிருக்கும் குறித்த வைத்தியருக்கே சம்மாந்துறை தனியார் சிகிச்சை கூடங்களில் நோயளர்கள் அதிகம் வரிசைப்படுத்தப்படுகின்றனர்.
இவ் விடயங்களை வைத்து நோக்கும் போது, ஒரு வேளை வைத்திய வியாபாரங்களுக்காக நிரந்தரமாக வரவிருக்கிற எவரும் நியமிக்கப்படாமல் சாதூரியமாக காய் நகர்த்தப்படுகின்றார்களோ தெரியவில்லை!
எது எவ்வாறோ, உள்ளக ரீதியில் இடம்பெற்ற திடீர் அதிர்ச்சிக் காய்ச்சல் காலத்துக்கு காலம் வந்து போகின்ற ஒவ்வாமை நோய்களாக மாறிவிடாமல்; முற்றுமுழுதாக, முழு முயற்சியின் வினைத் திறனான விடிவு காலம் முளைத்தெழும்ப வேண்டும்.
சம்மாந்துறை வைத்தியசாலையில் அதீத பற்று வைத்து கிளர்ந்தெழுந்த இளைஞர்களே!, மேடைக்கு மேடை அரசியல் காலங்களில் வாக்கு கொடுத்து வாக்குகளை வசமாக்கிய அரசியல் வாதிகளே!, ஊரின் உரிமத்தை அமானிதமாக கையிலெடுத்த ஊர் நிர்வாகிகளே!!…
வண்டறிப்பது போல், இலை மறை காயாக விளைந்து வெளிவராமல் பரவிக் கொண்டிருக்கின்ற V.O.G. பிரச்சினை உங்களின் மேலான கவனத்திற்கு!!
✍️ கியாஸ் ஏ. புஹாரி