கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சின் சிறு கைத்தொழில்களை மேம்படுத்துவனூடாக பொருளாதாரத்தினை மேம்பாடடையச் செய்தல் “திவியட்ட உதானய” எனும் வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை செயலகத்திற்கு உட்பட்ட பயிற்சியிளை முடித்துக் கொண்ட சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுக்கு தொழில் முயற்சி இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் (07) பிரதேச செயலாளர் எஸ்.எம்.முஹம்மட் ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.
இதில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.
இதன்போது சம்மாந்துறை செயலகத்திற்கு உட்பட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் 100 பயனாளிகளுக்கு 2 மில்லியன் ரூபா பொறுமதியான தையல் இயந்திரங்கள், மா அரைக்கும் இயந்திரம், மேசன் உபகரணங்கள், ஓடாவி உபகரணங்கள், சிறுகைத்தொழில் உபகரணங்கள், கேஸ் அடுப்புக்கள், விவசாய உபகரணங்கள் என்பன பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.