By-Faizer Aman
2018ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள சம்மாந்துறை கல்வி வலய மாணவர்களுக்கான கருத்தரஙங்கொன்று கடந்த 27.01.2019 ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை மஜீட் மண்டபத்தில் நடைபெற்றது.
சம்மாந்துறைப் பிரதேச சபையும் கல்முனை BCAS உயர்கல்வி வளாகமும் இணைந்து நடாத்திய இந்நிகழ்வில் முன்னாள் பாiராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமான கௌரவ A.M.M. நௌஷாட் அவர்கள் முழுமையாக கலந்து கொண்டதோடல்லாமல் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவர்களுக்கு அவசியம் தேவையான கணணி, ஆங்கிலம் மற்றும் சிங்களம் போன்ற கற்கை நெறிகளை BCAS உயர்கல்வி வளாகத்துடன் சேர்ந்து இலவசமாக பயிற்றுவிக்கப்போவதாகவும் அவர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கவிருப்பதாகவும் உறுதியளித்தார்கள்.
காலை 9 மணிக்கு ஆரம்பித்த இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷட விரிவுரையாளர் F.H.A..ஷிப்லி, BCAS கல்முனை வளாகத்தின் முகாமைளார் N.T. ஹமீட் அலி உட்பட சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், உத்தியோகஸ்தர்கள் மற்றும் BCAS உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.