Ads Area

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் 50000 வேலைத்திட்டங்கள்.


ஏ.ஜே.எம்.ஹனீபா

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் 50000 வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலிருந்தும் 250 வீதம் 20 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 5000 வேலைத்திட்டத்தை அடையாளப்படுத்தும் வகையில் நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கான அறிவூட்டல் செயலமர்வு நிந்தவூர் பிரதேச செயலகத்தில் 2019.01.24ம் திகதி தலைமைப்பீட சமுர்த்தி முகமையாளர் ஏ.அன்வர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம்.அப்துல் லத்தீப் பிரதம அதீதியாக கலந்து கொண்டார்.

மாவட்ட சமுர்த்தி காரியாலயத்தின் இணைப்பாளரான நானும்,நிந்தவூர் பிரதேச செயலக முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி பரீரா, திட்ட முகாமையாளர் திரு சிறிநாதன்,வங்கி முகாமையாளர்களான திரு சிவநேசன் மற்றும் இக்றாம் உட்பட சமூர்த்தி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்ட போது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe