அன்சார் காசீம்
சம்மாந்துறை பிராந்திய நீர்ப்பாசனத் திணைக்களப் பொறியியலாளர் பிரிவிட்குட்பட்ட நெய்னாகாடு ஆஸ்பத்திரிச் சேனை வட்டைப் பிரதேசத்தில் “கிராம சக்தி” அபிவிருத்தித் வேலைத்திட்டத்தின் கீழ் 3 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள திராவோடை அணைக்கட்டுக்கு இரும்புத்கதவு நிர்மாணம் மற்றும் நீர்ப்பாசனக் குழாய் அமைத்தல் போன்ற வேலைத்திட்டங்களை வைபவ ரீதியாக திறந்து வைக்கும் வைபவம் நேற்று(6) இடம்பெற்றது.
ஆஸ்பத்திரிச்சேனை விவசாய அமைப்புப்பின் தலைவர் எஸ்.எல். சுலைமாலெவ்வை தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரமத அதிதியாக கலந்து கொண்டு இரும்புக்கதவினை திறந்து வைத்தார்.
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின் முயற்சியின் காரணமாக இப்பிரதேச விவசாயிகளின் நீண்டகாலத் தேவையாக இருந்த நிர்மாணிக்கப்ட்டுள்ள இவ்வேலைத்திட்டத்தின் மூலம் சுமார் 400ஏக்கர் விவசாய நிலங்களுக்கு சீரான நீர்ப்பானசம் கிடைப்பெற்றுள்ளது.
ஆஸ்பத்திரிச்சேனை விவசாய அமைப்பினால் கலந்து கொண்ட அதிதிகளுக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இங்கு ஆஸ்பத்திரிச்சேனை விவசாய வட்டையின் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.