மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட 14 மாட்டிறைச்சி கடைகளையும் மறு அறிவித்தல் வரும் வரை தற்காழிகமாக மூடுமாறு, சகல கடை உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக, மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ் தெரிவித்தார்
இவ்விடயம் தொடர்பாக மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ் கருத்து தெரிவிக்கும் போது, “அண்மைக் காலமாக மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட தோப்பூர், மூதூர் கிழக்கு போன்ற பகுதிகளில் அதிகளவான மாடுகள் உயிரிழந்துள்ளதோடு, தொடர்ந்தும் உயிரிழந்து வருகின்றன.
“இவ்வாறு மாடுகளின் திடீர் உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக, உயிரிழந்த மாடுகளின் இரத்த மாதிரிகள், பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கட்டுள்ளன. அதன் தகவல்கள் வரும் வரையில், சகல மாட்டிறைச்சிக் கடைகளும் தற்காலிகமாக மூடப்படும்” என்றார்.