(எம்.எம்.ஜபீர்)
நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் குடிநீர்க் குழாய் பொருத்தப்படாது விடுபட்டுள்ள வீதிகளுக்கு புதிய குடிநீர்க் குழாய் இணைப்புக் குழாய்களை பொருத்துதற்கான மீளாய்வுக் கூட்டம் முன்னாள் கிழக்கு மாகாண சபை சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில் மத்தியமுகாம் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை காரியாலயத்தில் நேற்று நடைபெற்றது.
குடிநீர்க் குழாய்கள் புதிதாக பொருத்தப்பட்டு வருகின்ற வேலைத்திட்டத்தினை துரிதமாக முன்னெடுப்பது தொடர்பாகவும் இதற்கு மேலதிகமாக குடிநீர்க் குழாய் பொருத்தப்படாது விடுபட்டுள்ள ஏனைய பிரதேசங்களுக்கும் குடிநீர்க் குழாய்கள் பொருத்துவது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
இம்மீளாய்வுக் கூட்டத்தில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அம்பாரை மாவட்ட உதவி பொது முகாமையாளர் எம்.எம்.எம்.நஸீல், நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் ரீ.கலையரசன், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கல்முனை பிராந்திய முகாமையாளர் ஐ.எல்.எம்.ஜவாஹிர், நாவிதன்வெளி பிரதேச சபை உப தவிசாளர் ஏ.கே.அப்துல் சமட், கல்முனை பிராந்திய பொறியியலாளர் எஸ்.சதீஸ், மத்தியமுகாம் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறுப்பதிகாரி ஏ.ஆர்.எம்.அஸ்கர், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.வீ.நவாஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளர் ஏ.சீ.நஸார், நாவிதன்வெளி பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் எம்.ஐ.தஜாப்தீன், பிரதேச சபை வேட்பாளர்களான ஏ.எல்.எம்.இம்தியாஸ், சலீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.