பாடசாலை நேரத்தில் அதாவது காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரையான நேரத்தில் பகுதி நேர வகுப்புக்களை நடத்த தடை விதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன், இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தில் கல்வியமைச்சர் கையொப்பமிட்டுள்ளதாக தெரியவருகிறது.மேலும், கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் பாடசாலை நேரத்தில் மாணவர்களுக்கு பகுதி நேர வகுப்பு நடத்தப்படுவதாகவும், இது தொடர்பில் பெற்றோர்களும் அவதானிக்க வேண்டும் எனவும் கல்வியமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.