Ads Area

மன்சூர் என்ற சம்மாந்துறை முற்றத்து மல்லிகை சிலருக்கு மணப்பதில்லை.

டொக்டர் - றிஸ்வான் முஹம்மட்.

சம்மாந்துறைத் தேர்தல் தொகுதியைக் கொண்டுள்ள ஒரு பெரிய ஊரே நமதூராகும். ஆனால் பத்து வருட காலம் MP இல்லாத அரசியல் அனாதையாக நமது மக்கள் வாடிய போது நமதூரைத் தத்தெடுத்தது போல் பாராளுமன்றத்துக்கு தெரிவானார் ஒரு ஏழையின் மகனான நமது இன்னல்களையும் துயரங்களையும் அணுபவித்து அறிந்த நமதூரின் மண்ணின் மஹிந்தன் கௌரவ MIM மன்சூர் MP அவர்கள்.

இவருக்கு அரசியல் புதிதல்ல. மர்ஹூம் தலைவர் MHM அஷ்ரப்f அவர்களின் வழிகாட்டலில் வளர்ந்த அடிமட்டத் தொண்டன். நமதூரின் தவிசாளர் , கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்து பாராளுமன்றத்துக்கு காலடி எடுத்து வைத்தவர். அதாவது அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்.அதுமட்டுமல்லாது இவரொரு பட்டதாரியும் கூட, ஆகவே கற்ற, அனுபவம் வாய்ந்த அரசியல் வாதியொருவர் நமக்குக் கிடைத்திருப்பது ஒரு வரப்பிரசாதம் என்றுதான் கூற வேண்டும்.

நமது மண்ணின் மஹிந்தனின் துணிச்சலை பாராளுமன்றத்தில் காணலாம். சரியான போக்கை அரசியல் குழப்ப நிலையில் கண்டிருப்பீர்கள். இவ்வாறான ஒரு தரம் வாய்ந்த அரசயலை சரியாகச் செய்யும் அரசியல்வாதியை பிடிக்காது சிலர் நினைப்பதன் காரணம் என்ன.??

சிறந்த உதாரணத்தைக் கூறுகின்றேன். மர்ஹூம் அப்துல் மஜீட் MP அவர்களை தற்போது போற்றுகிறீர்கள். ஆனால் அவர் உயிரோடு இருந்த நேரம் துரத்தினீர்கள். இவ்வாறான பழக்கத்தை நீங்கள் இன்னும் திருத்திக் கொள்ளவில்லையா!!

கௌரவ MIM மன்சூர் MP அவர்களைப் பற்றி அவரின் மீது புறாமையும் எரிச்சலும் கொண்டவர்களின் அவதூருகளைக் கேட்டு நீங்களும் அவரைப் பிழையாகக் கருதி பாவத்தை சுமந்து விடாமல் அவருடன் ஐந்து நிமிடமாவது கதைத்து பேசிப் பாருங்கள். அப்போதுதான் அவரின் அருமை விளங்கும். நீங்கள் பேசுவதற்கு முன் அவரைப் பற்றி பிழையான எண்ணம் கொள்வதும் பரப்புவதும் நமது சமூகத்துக்கு செய்யும் துரோகமாகும்.

அவர் சில கருத்துக்களை சரியாகச் சொல்லும் போது அதை ஏற்றுக் கொள்ளாத சிலர் அவரை எதிரியாக எண்ணுகின்றீர்கள். அரசியலில் வாக்குக்காக நடிப்பவர்களே தட்டிக் கேட்காதும் தட்டிக் கொடுக்காதும் பாஷாங்கு செய்பவர்கள்.

ஆனார் இவர் எனக்கு பிடித்த ஒரு நேர்மையான எல்லாப் பிரச்சினைகளையும் கேட்கக் கூடியவரும் அதற்கான தீர்வுக்கு வழிகாட்டுபவருமான சிறந்த உயர்ந்த மனிதராவார்.

என்னால் என் சம்மாந்துறைச் சகோதரர்களுக்கு சொல்ல வேண்டிய விடயம் என்னவென்றால் மற்றவர்களின் கதையைக் கேட்டு தப்பெண்ணம் கொள்வதை விட்டுவிட்டு நமது ஊரின் மண்ணின் மஹிந்தனுடன் பேசுங்கள் ,ஏசுங்கள், தட்டிக் கேளுங்கள் ,அவை அனைத்தையும் தாங்கி சேவை செய்யும் சேவகனே! கௌரவ MIM மன்சூர் MP அவர்கள்.

யாஅல்லாஹ்! நீயே ஆட்சியையும் அதிகாரத்தையும் வழங்குபவன். சம்மாந்துறை மக்களின் ஆதரவு குறைவாகக் காணப்பட்ட போதும் எம் மக்களுக்காக அவரை MP ஆக அணுப்பியிருந்தாய். அவரின் அரசியல் பயணத்தில் மேலும் மேலும் உயர வழிவகுத்து எம்மக்களின் அரசியல் தேவைகளை நிவர்த்தி செய்வாயாக! ஆமீன்.

சம்மாந்துறை முற்றத்து மல்லிகை எனக்கு மணக்கிறது.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி பெருவிழா ஆயத்த வேலைகளில் நள்ளிரவை தாண்டியும் கௌரவ. பாராளுமன்ற உறுப்பினர் MIM Mansoor அவர்கள் களத்தில்.



சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு 40 நவீன கட்டில்களை அயராத முயற்சியால் பெற்றுத் தந்த பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மன்சூர்.


சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு 814 மில்லியன் செலவில் புதிய கட்டிடம்  பெற்றுத் தந்த பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மன்சூர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe