நன்றி - ஹாசிப் யாசீன்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல ஊர் இளைஞர்களிடமிருந்து பணத்தினையும், கடவுச்சீட்டுக்களையும் பெற்றுக் கொண்டு ஏமாற்றி வந்த குறித்த நபர் தொடர்பாக இவரால் ஏமாற்றப்பட்ட இளைஞர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் குற்றப்புலணாய்வு உத்தியோகத்தர்களுக்கு தகவல் கொடுத்ததனையடுத்து இவர் சம்மாந்துறைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞரை சம்மாந்துறை பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததையடுத்து மேலதிக விசாரனைக்காக 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் குற்றப்புலனாய்வு உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.