நற்பிட்டிமுனை அல்-அக் ஷா மகா வித்தியாலயத்தின் அதிபர் கலை இலக்கியவாதி எம்.எல்.ஏ. கையூம் தலைமையில் இன்று (24) அறிஞர் சித்திலெப்பை ஞாபகார்த்த விருது வழங்கல் விழா இடம் பெற்றது.
கல்முனை பிரதேச செயலாளர் அல்-ஹாஜ் எம்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந் நிகழ்வில் கலை-இலக்கிய ஆளுமைகளுக்கு விருதுகளும், பட்டங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட சமூர்த்தி கண்காணிப்பு அதிகாரியும், ஊடகவியலாளரும், இலக்கியவாதியுமான திரு. முஹம்மட் ஹனீபா அவர்கள் பொண்ணாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள்.