அண்மையில் யாழ்ப்பாணம் ரிம்பர் மண்டபத்தில் மாபெரும் இலக்கியக் கொண்டாட்டம் இடம்பெற்றது.
இக்கொண்டாட்டத்தை இந்தியாவின் இனிய நந்தவனம் மாத சஞ்சிகையும், சர்வதேச ஊற்று வலையகக் கலைஞர்கள் மற்றும் யாழ் இலக்கியக் குவியும் அமைப்பும் இணைந்து இலங்கை - இந்தியப் படைப்பாளர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகளுடனான சந்திப்பும், நூல் அறிமுகங்களும் இடம்பெற்றன.
இலக்கியக் கொண்டாட்டம் ஊற்று வலையுலக கலைஞர்கள் மன்றத்தின் தலைவர் - கலைமாமணி த.ரூபன் தலைமையில் இடம்பெற்றது.
கொண்டாட்டத்தில் பல நுற்றுக் கணக்கான கல்வியலாளர்களும், பேராசிரியர்களும், கலாநிதிகளும், விரிவுரையாளர்களும், உயர் இலக்கிய விருதுகள் பல பெற்ற இலக்கிய ஆளுமைகளை, தமிழ் பற்றாளர்களும் ,ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இலக்கியக் கொண்டாட்டத்தில் 5நூல்கள் பற்றிய விமர்சன உரைகள் தலா 8 நிமிடம் கொண்டதாக வரையருக்கப்பட்டு நிகழ்த்தப்பட்ட்து.
அந்த வகையில் நூல்களின் விமர்சன உரையினை = யாழ் இலக்கிய குவியும் அமைப்பின் நிறுவினர் -வேலனையூர் தாஸ் அவர்களும், சிரேஷ்ட ஊடகவியலாளர் - வன்னிமகன் எஸ்.கே.சஞ்சிகா அவர்களும் , பொறியியலாளர் -கு.வெங்கடேசன் அவர்களும் , வலக்கறிஞர் - பி.ஆர்.சந்திரசேகரன் அவர்களும் , கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் சிரேஷ்ட விரிவுரையாளர் - கவிஞர்.வேல்.நந்தகுமார் ஆகியோரும் மிகவும் குறுகிய நேரத்தினுள் செய்து முடித்தனர்.
நிகழ்வின் மனிமாகுடமாய் 45நிமிடங்கள் கொண்டதாய் " 21ஆம் நூற்றாண்டில் தமிழின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்" எனும் தலைப்பில் ஆய்வுக் கருத்துரை வழங்க அழைக்கப்பட்டிருந்தார். சம்மாந்துறை மண் பெற்றெடுத்த மகன்- தேசமான்ய.தேசபந்து. ஜலீல் ஜீ ( ஸ்தாபித்த தலைவர் - அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவை)
இவருடைய மிக நீண்ட ஆய்வுடன் கூடிய கருத்துரையினை நிகழ்த்திய போது அவையின் அனைவரும் எழுந்து கரகோஷம் செய்து ஜலீல் ஜீ யை உச்சிமுகர்ந்து பாராட்டினர்.
கொண்டாட்டத்தின் இறுதியில் யாழ்பாணணன் மின் நூல் வெளியீடகத்தின் பிரதம வெளியீட்டாளர் - திரு.யாழ்பாணணன் அவர்களினால் நன்றியுரை நிகழ்வுடன் நிகழ்வு முற்றாயிற்று.