Ads Area

நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட குணாளினி ஆசிரியையை கௌரவிக்கும் நிகழ்வு.

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயத்தில் இன்று (18.02.2019) 2017ம் ஆண்டு நிருவாக சேவை திறந்த போட்டிப் பரீட்சைக்கு தோற்றி நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட காரைதீவை சேர்ந்த பாடசாலை இரசாயனவியல் ஆசிரியை B.குணாளினி அவர்களுக்கு பொன்னாடை,பரிசில் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் ACAM.இஸ்மாயில் தலைமையில் ஆரம்பமானது.

அதனை தொடர்ந்து தாய் மொழி தினத்தை முன்னிட்டு முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் கவிஞர் புலவர்மணி மருதூர் A மஜீட் அவர்களினால் உரையும் நிகழ்த்தப்பட்டது.

மேலும் தேசிய மீலாத் கலாச்சாரப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பணப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.










Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe