Ads Area

பாராளுமன்ற மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கான மகிழ்ச்சி செய்தி.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கான இலவச தபால் கொடுப்பனவை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு, ஒரு வருடத்திற்கு வழங்கப்பட்ட 1,75,000 ரூபா இலவச தபால் கொடுப்பனவு 3,50,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு, ஒரு வருடத்திற்கு வழங்கப்பட்ட 24,000 ரூபா இலவச தபால் கொடுப்பனவு 48,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் குறித்த திருத்தத்தை கொண்டு வந்துள்ளதுடன் அதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. 

இந்த திருத்தம் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe