தகவல் - மொஹமட் றிஸ்வான் (ஆசிரியர்)
சம்மாந்துறை மு.ம.ம.வித்தியாலயத்தில் பெண்கள் பிரிவிற்கான புதிய விஞ்ஞான ஆய்வு கூடம் அதிபர் ACAM இஸ்மாயில் சேர் தலைமையில் இன்று (18.02.2019) திறந்து வைக்கப்பட்டது.
கடந்த காலங்களில் பெண்கள் பிரிவு மாணவர்கள் 250M தூரத்திற்கு அப்பால் உள்ள பிரதான ஆய்வு கூடத்துக்கு சென்றே பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரி பீடாதிபதி MIM நவாஸ் அவர்களும்,கௌரவ அதிதியாக சம்மாந்துறை வலய திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் MHM ஜாபிர் அவர்களும்,விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.