போதைப்பொருள் குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு, உறுதியாக மரணதண்டனையை நிறைவேற்ற முடியும் என, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மரணதண்டனை விதிக்கப்பட்ட 17 பேரில் நால்வர் வௌிநாட்டுப் பிரஜைகள் என்பதால், ஏனைய 13 பேருக்கு மாத்திரமே மரணதண்டனையை நிறைவேற்ற முடியும் என அமைச்சின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 48 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில் 30 பேர் மேன்முறையீடு செய்துள்ளதால் அவர்களுக்கு மரணதண்டனையை நிறைவேற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், அனைத்து குற்றவாளிகளும் 50 க்கும் குறைவான வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.