கியாஸ் ஏ புஹாரி.
“எனக்கு மக்கள் தான் கட்சி, மறாக கட்சிக்காக நான் இல்லை” என்று தவிசாளர் நௌஷாத் அடிக்கடி கூறுவார். மக்களுக்கு நல்லெதென யார், எதனைக் கொண்டு வந்தாலும் அளவு கடந்து ஆதரிப்பதில் வல்லமையுடையவர் அவர்.
இப்படி பல விடயங்களை தனக்குள்ளேயே புகுத்தி வைத்திருக்கும் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் கடந்த பிரதேச சபைத் தேர்தலில் அ.இ.ம.கா. கட்சி சார்பில் போட்டியிட்டமையானது, கட்சியினால் தனக்கு கிடைத்த வாய்ப்பினைக் காட்டவா அல்லது தனது வாக்கினால் கட்சியின் நேர், எதிர் பின்புலத்தை வெளிக்காட்டவா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
இந்த நகர்வு ஒருபுறம் சேவைகளை ஆதரிப்பதாக இருந்தாலும், மறுபக்கம் மு.காவுக்குள் நௌஷாத் தாவும் படலமாக இருக்குமோ? என்கின்ற சந்தேகமும் திடுக்கிடும் ஒரு செய்தியாக உலாவுகின்றது. எது உண்மை, பொய் என்பதை தற்காலத்தில் உணர முடியாத நிலையிலேயே அரசியல் பயணங்கள் தொடர்கின்றன. இருந்தாலும் இந்த நகர்வு கொஞ்சம் சிந்திக்க வேண்டியதுதான்.
பொறுத்திருந்து பார்ப்போம்…
இந் நிலைமையில் சிந்திக்கும் போது, மயில் தேசியப் பட்டியல் எம்.பி.யைக் கொடுத்து அடுத்த தேர்தலுக்கான விதை போட்ட கதையும் கேள்விக் குறிதான்!