அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களும் எதிர்காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தியடையவுள்ளன. இது பற்றிய கலந்துரையாடல் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தாஹிர் அவர்களின் தலைமையில் அவரது இல்லத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்களின் பங்கு பற்றுதலுடன் அண்மையில் 2019.02.16 ம் தேதி இடம் பெற்றது.
இக் கலந்துரையாடலில் நிந்தவூர் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் இங்கு நிலவும் காணிப் பிரச்சினைகள் குறித்தும் எமது ஆதரவாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நமது எதிர்கால திட்டங்களை அமைப்பதற்கான வழி வகைகள் குறித்தும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
இறுதியில் மாதத்தில் ஒரு தடவை பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் நிந்தவூரில் அமைந்துள்ள எமது கட்சிக் காரியாலயத்தில் மக்கள் சந்திப்பினை மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.