பகிடிவதையால் கடந்த காலங்களில் பல்கலைக்கழகங்களுக்கு செல்லாதிருக்கும் மாணவர்களின் தொகை 1,500 யும் தாண்டியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 25 வருடங்களில் பகிடிவதையால் சுமார் 25 மாணவர்கள் மரணமடைந்துள்ளதுடன், உடல், உள ரீதியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு சிறு பிரிவினரின் மிலேச்சத்தனமான நடவடிக்கைகளால் பெரும்பான்மையான பிள்ளைகளின் எதிர்காலம் சீரழிவதற்கு இடமளிக்க முடியாது. இன்று சில அரசியல் குழுக்களின் நடவடிக்கைகளுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பலியாகியுள்ளனர். நாட்டைப் பொறுப் பேற்கவுள் ள எதிர்கால தலைமுறையினரை இதிலிருந்து பாதுகாக்க வேண்டும்.
பொலன்னறுவை தேசிய தொழிற்பயிற்சி நிறுவனத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் (07-09-2018) கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வருடம் நிகழ்வு ஒன்றின் போது பல்கலைக்கழக பகிடிவதைகள் தொடர்பாக தெரிவித்த கருத்தே.
சமூக வலைத்தளங்களில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் பகிடிவதை வீடியோக்கள் பரவிவரும் இச் சந்தர்ப்பத்தில் ஒரு ஞாபகமூட்டலுக்காகவே இச் செய்தி.