ஏ.ஜே.எம்.ஹனீபா
வெளிநாட்டு அமைச்சின் மேலதிக செயலாளரும் சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷுறா அமைப்பின் அமீருமான அஷ்ஷேஹ் எம்.ஐ. அமீர் நளீமி தலைமையில் மர்ஹூம் டாக்டர் எம்.எம்.மீராலெப்பை எழுதிய சம்மாந்துறை சரித்திரம் நூல் அறிமுக விழா நேற்று (09) சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது.
இந்த நிகழ்வில் சம்மாந்துறையின் முக்கிய பிரமுகர்கள், கல்விமான்கள், பலரும் கலந்து சிறப்பித்தனர்.