சாரதி அனுமதி பத்திரத்தை விநியோகித்தல், புதுப்பித்தல், சாரதி அனுமதி பத்திரத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை விரைவில் விடுமுறை நாளான சனிக்கிழமைகளிலும் மேற்கொள்ள போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சு தீர்மானித்துள்ளது.
போக்குவரத்துறை தொடர்பாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.சாரதி அனுமதி பத்திரத்தை விநியோகித்தல், புதுப்பித்தல், சாரதி அனுமதி பத்திரத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை சனிக்கிழமைகளிலும் சாரதிகளால் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.