(காரைதீவு நிருபர் சகா)
முல்லைத்தீவு மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சகராக எ.டபிள்யு.அப்துல் கபார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் (12) செவ்வாய்க்கிழமை கடமையைப் பொறுப்பேற்றார்.
நீண்டகாலமாக பிரதான பொலிஸ் பரிசோதகராகவிருந்த அப்துல்கபார் கடந்த 21.02.2019 இல் உதவிப்பொலிஸ் அத்தியட்சகராகப் பதவியுயர்வுபெற்றார்.
பயிற்சியின் பின்னர் கம்பஹா மற்றும் கொழும்ப கோட்டை பொலிஸ்நிலையத்தின் பிரதான பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றினார்.
இந்நிலையில் உதவிப்பொலிஸ் அத்தியட்சகராக நேற்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டார். மாவட்டமொன்றிற்கு பொறுப்பாக அவர் முதல்முறையாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.