தகவல் - டொக்டர் நியாஸ் அஹமட்.
சம்மாந்துறையைச் சேர்ந்த தையல் இயந்திர திருத்துனரும் பல்துறைத் தொழில் நுட்பவியலாளருமான கவிஞர் அபூ அப்கான் (தாஹிர்) என்பவர் புதிய ஆக்கபூர்வமான இயந்திரம் ஒன்றை உருவாக்கி அனைவரது பாராட்டையும் பெற்று வருகின்றார்.

இவ்வியந்திரம் மின்சாரத்தின் மூலம் இயங்குகிறது. அதே நேரம் மின்சார வசதியற்ற இடங்களில் தையல் இயந்திரத்தைக் காலால் மிதித்து இயக்குவது போன்று இயக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். இவ்வியந்திரத்தினால் ஒரு நிமிடத்திற்குள் ஒரு தேங்காயைத் துருவி முடிக்க முடியும்.
கவிஞர் அபூஅப்கான் அவர்களுக்கு எமது மனமார்ந்த நல் வாழ்த்துகள்.