Ads Area

வீதியில் காத்திருந்த இளைஞர்கள், இறங்கி வந்து விபரம் கேட்டறிந்த ஆளுனர்.

கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அன்மையில் சம்பூர் பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்ட வேளை அப்பகுதி இளைஞர்கள் ஆளுநரின் வருகையினை எதிர்பார்த்து வீதியில் காத்திருந்தனர் அவ் இளைஞர்களை அவதானித்த ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் பயணித்த வாகனத்திலிருந்து இறங்கி அவ் இளைஞர்களின் நோக்கம் தொடர்பாக கேட்டு அறிந்து கொண்டார்.

ரெட்டைமன் விளையாட்டுக் கழக வீரர்கள் ஆளுநரிடம் தமக்கு விளையாட்டு செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு மைதானம் இன்மையினால் தாம் மிகவும் சிரமம்களை எதிர்கொள்வதாக முறையிட்டதையடுத்து உடனடியாக ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மூதூர் பிரதேச செயலாளருக்கு கடந்த காலங்களில் இவ் விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்காக பயண்படுத்திய காணியை உடனடியாக வழங்குமாறு வேண்டி குறிப்பிட்ட கடிதத்தினை அனுப்பி வைத்தார்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe