அம்பாறை மாவட்ட புகைப்படப் பேரவை முதற் தடவையாக நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ரிம்சான் தலைமையில் அண்மையில் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் புகைப்படம் தொடர்பான செயலமர்வு ஒன்றும் இடம் பெற்றது இதில் முஹம்மட் பிறோஸ் அவர்கள் வளவாளராகவும் கலந்து கொண்டு புகைப்படத் துறையின் நுட்பங்களையும், அது தொடர்பான தொழிநுட்ப விளக்கங்களையும், புகைப்படம் சார்ந்த அறிவுரைகளை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.