பாராளுமன்ற தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி பல்வேறு கட்டமாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வறுமை மற்றும் வேலையின்மையை போக்க தவறிய பாஜக அரசு, தனது தோல்விகளை மறைத்து, தேர்தலுக்காக மக்களை திசை திருப்பும் வகையில் முடிந்துபோன பழைய பிரச்சனைகளை மீண்டும் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பிரதமர் மோடி தனது சுய விளம்பரத்திற்காக அடிக்கல் நாட்டுவது போன்ற விழாக்களுக்கு ரூ.3044 கோடி செலவிட்டுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் பின்தங்கி இருக்கும் கிராமங்களுக்கு கல்வி மற்றும் மருத்துவம் ஆகியவற்றிற்கு அரசின் பணம் செலவிடப்பட வேண்டும். ஆனால், பாஜக அரசு தங்கள் கட்சியின் விளம்பரத்திற்கு செலவிடுவதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகின்றது’’ என மாயாவதி பதிவிட்டுள்ளார்.