அனைத்து தமிழ் பேசும் உறவுகளுக்கும் பேரன்பிற்குரிய வணக்கம்,
எதிர்வரும் மார்ச் மாதம் 09.03.2019-தாம் திகதியன்று இவ்வருட மகளிர் தினத்தை முன்னிட்டு நாவலர் ஈழமேகம் பக்கீர்த் தம்பி ஞாபகார்த்த கவியரங்கம் தமிழா ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் மு .ப 8.45 மணிக்கு உலகறிந்த பன்முக ஆளுமை கவிஞர் வித்தியா சாகர் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
சிறப்பு கவிதை பாடும் கவிஞர்கள்.
1) சந்தக்கவிஞர் திரு. முகம்மது இஸ்மாயில் அச்சி முகம்மட்
2) கவிஞர் திரு. வேலணையூர் ராஜிந்தன்
1) எழுத்தாளர் திருமதி. சம்மாந்துறை மஷூறா
2) கவிஞர் திருமதி. ஏம்.ஐ.சித்தி றபீக்கா
கவியரங்கதிற்கு தேர்வாகியுள்ள கவிஞர்கள்..
1) கவிஞர் திருமதி. றியாசா வாஹிர்
2) கவிஞர் செல்வி. றிப்னா றியாஸ்
3) கவிஞர் திரு. ஆசுகவி அன்புடீன்
4) கவிஞர் திருமதி. யுகதாரிணி
5) கவிஞர் திரு. எம்.எச்.அலியார்
6) கவிஞர் செல்வி. மு.ஸாஹிரா பானு
7) கவிஞர் திரு.கே.எம்.ஏ. அசிஸ்
8) கவிஞர் திரு. அருளானந்தம் சுதர்சன்
அனைவருக்கும் அன்பு வாழ்த்தும், ஏனையோர் வந்திருந்து, எமது கவியரங்கை சிறப்பிக்குமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கவிஞர்களை தேர்வு செய்த உலகறிந்த பன்முக ஆளுமை கவிஞர் வித்தியா சாகர் ஐயா அவர்களுக்கு இதயம் நிறைந்த நன்றி.
தொடர்புகளுக்கு - 0768589440
எஸ். எம். ஜெலீஸ்,
பணிப்பாளர்,
தமிழா ஊடக வலையமைப்பு,
இலங்கை.
“தமிழால் இணைவோம் கலை வளர்ப்போம்”