Ads Area

பாலியல் திருப்தி - யதார்த்தமான சில உண்மைகள் ( வாசிக்க வேண்டிய விழிப்புணர்வான பதிவு)

Ihshan J.M.I Mohamed 

திருமணமான பெண்கள் வேறு ஆண்களுடன் பாலியல் தொடர்பு வைத்துக்கொள்கிறார்களே அதற்குக்காரணம் என்ன? தனக்கு ஆண்மைக்குறை உள்ளதாக நினைத்துக்கொண்டு, தான் திருமணம் முடித்தபின் மனைவியை திருப்திப்படுத்தமுடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் திருமணம் முடிக்காமலிருக்கும் இருக்கும் ஒரு இளைஞன் என்னிடம் கேட்ட கேள்வி.

ஒரு உறவினைக் கட்டியெழுப்புவதில் உடலுறவுதான் முதன்மையானது என்பது ஆண்களின் எதிர்பார்ப்பு. பெண்களுக்குப் பாலியல் உற‌வு என்பது இரண்டாம் பட்சம்தான்.

ஒரு ஆண் நம்பிக்கைக்குரியவனாக‌, பாதுகாப்பானவனாக‌, தன்மீது உண்மையான அன்பு வைத்திருப்பவனாக இருக்கவேண்டும் என்பதே பெண்களின் முதன்மையான எதிர்பார்ப்பு. இவற்றைப்பூர்த்தி செய்பவனோடுதான், ஒரு பெண் பாலியல் ரீதியான உண்மையான சந்தோசத்தை எதிர்பார்ப்பாள். ஆனால், இன்று பல குடும்பங்களில் ஆண்களால் தன் மனைவிக்கு மேலே சொன்ன விடயங்களில் திருப்தியை ஏற்படுத்த முடியாமல் போக, வெறுமனே திருமணம் முடித்துவிட்டோம், வேறு வழியில்லை என்ற ரீதியிலே பல பெண்கள் கணவனோடு உறவில் ஈடுபடுகிறார்கள்.

ஒரு கணவனோ,அல்லது காதலனோ ஒரு பெண்ணுக்கு மேலே சொன்ன மூன்று விடயங்களையும் திருப்திப்படுத்திவிட்டால், அவளை இந்த உலகத்தில் வேறு எந்தவொரு ஆணும் கனவில்கூட நெருங்க முடியாது. ஆனால், எப்போது ஒரு ஆண் தன் பெண் துணைக்கு நம்பிக்கைகும், அன்பிற்கும் உரியவனாகவும் இல்லாமல் போகின்றானோ அப்போதுதான் பிரச்சினை ஏற்படுகின்றது. இவ்வாறான நேரத்தில் மனது ஒரு நம்பிக்கைக்கு உரியவனாகவும், தன்னை உண்மையில் நேசிப்பவனாகவும் ஒருவனைச் சந்திக்கும்போது அவன்பால் ஈர்க்கப்படலாம்.

பெண்களின் பாலியல் திருப்தியில் முக்கியமானது தனக்குப்பிடித்தவனை சந்தோசப்படுத்துகிறோம் என்ற திருப்தி. அதற்காக, அவள் தான் நம்பும், தன்னை நேசிக்கும் ஒருவனைத் திருப்திப்படுத்த உறவி ஈடுபட சம்மதிக்கிறாள்.

ஆகவே, கணவன் இருக்கும்போது இன்னொரு ஆணோடு தொடர்பு வைத்துக்கொள்ளும் பெண்கள் வெறுமனே உடல் சுகத்திற்காக மட்டும் இன்னொருவனை நாடிப்போவதில்லை, வேறு ஒரு காரணத்தினால் ஈர்க்கப்பட்டு, பின்பு அவனைத் திருப்திப்படுத்துவதன் மூலம் தன்னைத்திருப்திப்படுத்தவே உறவில் ஈடுபடுகிறாள். இந்த விடயத்தை அறிந்த சில ஆண்கள் போலியாக நடித்து பெண்களை இலகுவாக ஏமாற்றிவிடுகிறார்கள்.

இவ்வாறு, கணவன் இருக்கும் போது இன்னொரு ஆணோடு தொடர்பில் இருக்கும் மனைவிகளின் குடும்பத்தை ஆராய்ந்தால், அநேகமான சந்தர்ப்பங்களில், கணவனுக்கும், மனைவிக்கும் இடையே பாரிய முரண்பாடு இருப்பது தெரியும்.

இந்த முரண்பாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று பாலியல் நாட்டத்தில் ஏற்படும் மாற்றம். திருமணம் முடித்த புதிதில் ஒரு ஆணுக்கு மனைவிமேல் இருக்கும் நாட்டம் காலப்போக்கில் குறைந்துசெல்லும். பெண்களுக்கு எதிர்மாறாக ஆரம்பத்தில் கணவ மீது பாலியல் நாட்டம் குறைவாக இருந்து, காலம் செல்லச் செல்ல , கணவன் மீதான நம்பிக்கை அதிகரிக்க அதிகரிக்க பாலியல் நாட்டம் அதிகரித்துச் செல்லும். இந்த எதிர்மறையான மாற்றத்தைப்புரிந்து கொள்ளாமல் விடுவதாலேயே பல குடும்பங்களில் பிரச்சினை ஏற்படுகிறது.

ஒரு சின்ன உதாரணம், ஒரே வகையான சற்றுக் கவர்ச்சியான உடையை தன் மனைவி போட்டுவந்தால் பாலியல் ரீதியாக தூண்டப்படாத ஆண்களில் பலர் அதே உடையை வேறு ஒரு பெண் போட்டுவந்தாள் பாலியல் ரீதியாக இலகுவாகத் தூண்டபட்டு விடுவார்கள். ஆனால் மனம் முடித்த ஒரு பெண்ணுக்கு கனவன் தாண்டி இன்னொருவன் பாலியல் நாட்டத்தை அவ்வளவு இலகுவாக ஏற்படுத்த‌ முடியாது.

இவ்வாறு நாட்கள் செல்லச் செல்ல கணவனுக்கு பாலியல் நாட்டம் குறைந்து செல்வதை பல பெண்கள் தவறாக புரிந்துகொள்வதே பல பிரச்சினைகளுக்கு அடிப்படைக்காரணமாக அமைந்துவிடுகிறது.

அப்போதும் பெண்கள், தங்களுக்கு திருப்தி கிடைக்கவில்லை என்பதற்காக கவலைப்படுவதைவிட, ஆரம்பத்தில் தன்னோடு அவ்வளவு ஈர்ப்பாக இருந்தாரே, இப்போது அவருக்கு என் மீது பிரியம் குறைந்து விட்டது, வேறு யாரும் பெண்ணோடு தொடர்பா இருக்குமோ? என் அழகு குறைந்துவிட்டதோ? அல்லது நான் அவரைப்போதியளவு திருப்திப்படுத்தவில்லையோ? என்று மண்டையைக்குழப்பி, அந்தக்குழப்பம் சண்டையாக மாறி விரிசலை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது. அந்த விரிசலில் மனமுடைந்துபோய் இருக்கும் பெண்களின் மனதுதான் இன்னொருவனால் இலகுவாக ஏமாற்றப்டக்கூடியதாக மாறுகின்றது.

பாலியல் ரீதியான குறைபாடுகளுடன் வரும் பல தம்பதிகளுக்கும் திருமணத்துக்குப் பின் இரு பாலாருக்கும் ஏற்படும் இயற்கையான பாலியல் நாட்டத்தை விளங்கப்படுத்துவதே அவர்களின் பிரச்சினையைத் தீர்க்கப்போதுமானதாகின்றது. ஆகவே, முதல் எல்லாம் என்னை எவ்வளவு லவ் பண்ணினீங்க, இப்போதெல்லாம் முன்பு மாதிரி இல்லை என்று மனைவி மார் அடிக்கடி புறுபுறுப்பதை நிறுத்தினாலேயே பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

அடுத்து ஒரு பெண்ணை பாலியல் படங்களில் வருவதுபோல உடல்ரீதியாக முற்றாகத் திருப்திப்படுத்தாவிட்டால், அவள் இன்னொருவரோடு ஓடி விடுவாள் என்று அச்சப்படுவதை நிறுத்த வேண்டும்.

இவன் தான் தனக்குரியவன், தன்னை மட்டுமே நேசிப்பவன், நம்பிக்கைக்குரியவன், பாதுகாப்பானவன் என்ற நம்பிக்கையைமட்டும் துணைக்கு ஒரு ஆணால் ஏற்படுத்த முடிந்தால் போதும் அவளை வேறு எவனும் கனவிலும் நெருங்க முடியாது. ஆண்கள் நினைப்பதுபோல‌ உடலுறவில் ஈடுபடும் நேர அளவிலோ, எண்ணிக்கையிலோ, ஆண் உடலின் பருமனிலோ ஆண்மை தங்கியிருப்பதாக பெண்கள் எப்போதும் நினைப்பதில்லை. பெண்களைப்பொறுத்தளவில் ஆண்மை என்பது மேலே சொன்ன‌ ஒரு பெண்ணை முழுமையாக நம்பவைக்குமளவுக்குரிய வல்லமையே!

"உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள் எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்" (அல்-குர்ஆன் 2:223)


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe