Ads Area

இலங்கையில் கைப்பற்றப்படும் போதைப் பொருளுக்கு என்ன நடக்கிறது? அதுவும் புத்தளத்துக்கு தானா?

இலங்கையில் சமீபகாலமாக போதை பொருள் பாவனை மிகவும் அதிகரித்து வருகின்றது. அதேநேரம் அவற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக ஜனாதிபதியின் தலைமையில் பாரிய செயல் திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாரம் தோறும் கிலோ கணக்கில் போதைப் பொருட்கள் கைப்பற்றப்படும் செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

பலர் முன் எழும் கேள்வி தான் இவ்வாறு கைப்பற்றப்படும் போதைப் பொருளுக்கு கடைசியில் என்ன நடக்கிறது என்பதே.

பொதுவான நடைமுறை குறிப்பிட்ட ஒரு பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டால் அது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படும். இக்காலப்பகுதியில் அந்த போதை பொருள் குறிப்பிட்ட நீதிமன்றத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

அதேநேரம் அதன் தன்மையை சோதிக்க Sample கள் அரச பகுப்பாய்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பாரிய அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்படும் பட்சத்திலும் அதனை குறிப்பிட்ட நீதிமன்றத்தில் பாதுகாப்பது கடினம் என்று நீதவான் கருதும் பட்சத்தில் அதனை அரசு அனுமதி பெற்ற பாதுகாப்பான வேறு இடங்களில் பாதுகாக்கப்படும்.

குறிப்பிட்ட போதைப்பொருள் சம்பந்தமான வழக்கு நிறைவுக்கு வரும் பட்சத்தில் இந்த போதை பொருள் இனி சாட்சியத்துக்கு தேவையில்லை என்ற கருதும் பட்சத்தில் அதனை அழிப்பதற்கு நீதவான் உத்தரவிடுவார். பொதுவாக நீதிமன்றங்களில் நீதவான் முன்னிலையில் போதைப் பொருட்கள் கரைசல் ஆக்கப்பட்டு மலசல கூடங்களில் கலக்கப்பட்டு விடும்.

2018 அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைவாக போதைப் பொருளை மக்கள் முன்னிலையில் அழிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இதனடிப்படையில் 2018 ஜனவரி மாதம் 16.7 billion பெறுமதியான 928.2kg Cocaine போதைப் பொருள் மக்கள் முன்னிலையில் அழிக்கப்பட்டது. இது Colombo Chief Magistrate Lal Ranasinghe வின் மேற்பார்வையில் இடம்பெற்றது. இதனை ஜனாதிபதி பிரதமர் மற்றும் பொலிஸ் பிரிவினர் பொதுமக்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.

இது கட்டுநாயக்கவில் உள்ள INSEE நிலையத்தில் அனைவரின் முன்னிலையிலும் போதைப் பொருள் திரவ ஊடகம் ஒன்றின் மூலம் கரைசல் ஆக்கப்பட்டது. 

கரைசல் ஆக்கப்பட்ட திரவமானது அதிவிசேட ஆபத்தான கழிவுகளை கொண்டு செல்லும் கொள்கலன்களில் ஏற்றப்பட்டு புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் 1300°C வெப்பநிலையில் எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டது.
இந்த முழு நடவடிக்கையும் நீதவான் மற்றும் அபாயகர ஔடதங்கள் தடுப்புப் பிரிவின் (Dangerous Drugs Control Board) கண்காணிப்பில் இடம்பெற்றது.

இவ்வாறு அழிக்கப்பட்ட கொக்கைன் போதை பொருளானது 2016 டிசம்பர் 9ஆம் திகதி இந்தியாவிலிருந்து ஈக்குவடோர் கடத்தப்படும் போது இலங்கை கடற்பரப்பில் வைத்து கைப்பற்றப்பட்டது. இதுவே தெற்காசியாவில் ஒரே முறையில் கைப்பற்றப்பட்ட அதிகளவான Cocaine ஆகும். 

போதைப்பொருள் அழிப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சர் சாகல ரத்நாயக்க 2015 தொடக்கம் 2017 வரையான காலப்பகுதியில் 34 பில்லியன் பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்றதோடு இந்த பெறுமதியின் அரைவாசிக்கும் குறைந்த தொகையே வருடமொன்றுக்கு பொலிஸ் திணைக்களத்தை நடாத்துவதற்கு செலவாகிறது என குறிப்பிட்டார்.

2016, 2017 காலப்பகுதியில் மாத்திரம் 1770kg கைப்பற்றப்பட்டது. இதன் பெறுமதி 140 million USD. இவற்றில் பிரேசிலில் இருந்து சீனி மூடைகளில் கொண்டுவரப்பட்ட 840kg யும் அடங்கும்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe