ஊடகப் பிரிவு.
தேவையுடைய மக்களின் வாழ்வாதார்த்தை பூர்த்தி செய்யும் நோக்குடன் இஸ்மாயில் எம் பி யினால் கைத்தொழில் அபிவிருத்தி சபைக்கான உத்தியோகபூர்வ விஜயம்.
கௌரவ. அமைச்சர் அல்ஹாஜ் ரிசாத் பதியுத்தீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் அம்பாரை மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி சபையின் சேவைகளை விஸ்தரித்து தேவையுடைய முயற்சியாளர்கள் பயனடைய வழிசெய்யயும் நோக்குடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம் இஸ்மாயில் அவர்களினால் நேற்று கைத்தொழில் அபிவிருத்தி சபைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் கைத்தொழில் அபிவிருத்தி சபை முகாமையாளர் W.K.M.S T. பண்டார உள்ளிட்ட அதிகாரிகளோடு கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. தொடர்ந்து பேசுகையில் அம்பாரை மாவட்ட தொழில் முயற்சியாளர்களின் தொழில் சார் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதோடு வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றும் வகையிலான பணிகளில் அப்பாரை மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி சபை செயற்படுகிறது, அந்த வகையில் உங்களை நான் பாராட்டுகிறேன், உங்களுக்கு இருக்கும் நிர்வாக ரீதியான சிக்கல்களை நிவர்த்தி செய்து நான் உங்களுடைய சேவைகளை விஸ்தரிப்பதற்கு தன்னாலான உதவிகளை செய்து தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர். எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் அம்பாரை மாவட்டத்தில் தொழில் முயற்சியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது, அத்தோடு பல வறிய குடும்பங்கள் தொழில் செய்வதற்கான திறன் இருந்தும் அவற்றுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் வழிகாட்டல்கள் இல்லாமல் இருக்கின்றனர் அப்படியான நிலையில் உள்ளவர்களுக்கு நீங்கள் கைகொடுத்து அவர்களுக்கான சந்தை வசதிகளை அடையாளம் காட்டி அவர்களது தொழில் முயற்சிகள் வெற்றிபெறுவதன் ஊடாக அவர்களது வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும்.
இதனையே எங்களுடைய கட்சியின் தலைவரும் உங்களது துறைசார் அமைச்சருமான அல்ஹாஜ் ரிசாட் பதியுதீன் அவர்களும் விரும்பி செயற்பாடுகிறர் எனவே அவர்களது முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தேவையுடைய ஒவ்வொரு பொது மகனும் உங்களுடை காரியாலயத்தினூடாக பயனடைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி. எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்கள் குறிப்பிட்டார்கள்.