ஒரே குடும்பத்தில் பிறந்த மூன்று பிள்ளைகளும் அடுத்தடுத்து க.பொ.த. சா.தரப்பரீட்சையில் 9ஏ சித்தி பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
முத்தமிழ் வித்தகன் விபுலாநந்த அடிகளார் பிறந்த காரைதீவில் இச்சாதனை இடம்பெற்றுள்ளது. காரைதீவு இ.கி;மிசன் பெண்கள் பாடசாலையில் பயிலும் செல்வி சகாதேவராஜா டிவானுஜா இம்முறை வெளியாகிய பெறுபேற்றின்படி 9 ஏ சித்திகளைப்பெற்றுள்ளார்.
இதேவேளை இவரது சகோதரியான செல்வி ச.மைத்ரி 2014இலும் சகோதரரான செல்வன் ச.யனோஜ் 2016இலும் க.பொ.த.சா.தரப்பரீட்சையில் 9ஏ சித்திகளைப்பெற்றிருந்தனர்.
காரைதீவு விபுலாநந்தவீதியைச்சேர்ந்த உதவிக்கல்விப்பணிப்பாளர் சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா நேசரஞ்சினி தம்பதியினரின் 3பிள்ளைகளுமே இத்தகைய தொடர் 9ஏ சித்திகளைப்பெற்றவர்களாவர்.
க.பொ.த.சா.த.பரீட்சைப்பெறுபேறுகளின்படி காரைதீவுக்கோட்டத்தில் இம்முறை 9மாணவர்கள் 9ஏ சித்திபெற்றுச்சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர்கள் 3 பேரும் காரைதீவு பிரபல ஊடகவியலாளர் சகா தேவராஜா அவர்களின் பிள்ளைகளாவர் என்பது குறிப்பிடத் தக்கது.
இவர்கள் 3 பேரும் காரைதீவு பிரபல ஊடகவியலாளர் சகா தேவராஜா அவர்களின் பிள்ளைகளாவர் என்பது குறிப்பிடத் தக்கது.