சம்மாந்துறை அல் அர்சத் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டிலும் பழைய மாணவர்கள் சங்கத்தின் தலைவரும் அதிபருமான M.A. றஹீம் (Principal) அவர்களின் வழிகாட்டலிலும் இப்பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரையும் ஒன்றினைக்கும் நோக்கத்தின் அடிப்படையில் "அர்சத்தியன்ஸ் திருவிழா" நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பகலிரவு கிரிகட் விளையாட்டுப் போட்டி, இரவு நேர கரப்பந்தாட்டப் போட்டி, மரநடுகை வேலைத்திட்டம், இரத்ததான முகாம் என பல நிகழ்வுகளை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பாடசாலையின் இலச்சினை பொறிக்கப்பட்ட ரீ சேட்டும் வழங்க தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்நிகழ்விற்கு அனைத்துப் பழைய மாணவர்களும் தங்களின் மேலான ஒத்துழைப்புக்களையும் வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இப்படிக்கு
பழயை மாணவர்கள் சங்கம்
அல் அர்சத் மகா வித்தியாலயம்
சம்மாந்துறை.