தகவலுக்கு நன்றி - சவுந்தர்யா.
புகை பிடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல; அதிலும் கஞ்சாவை பயன்படுத்தி புகை பிடிப்பது கண்டிப்பாக ஆரோக்கிய சீர் கேடை ஏற்படுத்தும். இந்த பதிப்பில் கஞ்சா பயன்படுத்துவதால் ஆண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள், ஆண்களின் ஆண்மையை கஞ்சா எப்படி பாதிக்கிறது மற்றும் கஞ்சாவால் ஆண்களின் விந்து அணு வடிவம் எப்படி மாறுபாடடைகிறது போன்றவை பற்றி படித்து அறியலாம்.
புகை கெடுதி!
பொதுவாக புகை பிடித்தல் பழக்கமே உடலுக்கு கெடுதி போன்ற செய்திகளை பிரச்சாரம் செய்து வரும் நிலையில், கஞ்சாவை பயன்படுத்துவது என்றால் இதனால் ஏற்படப்போகும் விளைவுகளை என்ன என்று கூறுவது. தற்காலத்தில் கஞ்சாவை மிஞ்சிய பற்பல போதை மருந்துகள் சந்தையில் விற்பனை ஆக ஆரம்பித்து விட்டன. இருப்பினும் நம் நாட்டில் கேரள கஞ்சா, தான் பரவலாக பயன்பாட்டில் உள்ளன.
கஞ்சா என்பது.
கஞ்சா என்பது ஒரு செடி வகை தான்; இந்த செடியை நுகர்ந்தால் ஒரு வித போதை மயக்கம் உண்டாகும். இந்த போதை நிலையை அடையவே பல ஆண்களும் பெண்களும் இதை பயன்படுத்தி வருகின்றன. இது உடலுக்கு நல்லது அல்ல என்பதால், கஞ்சா பயன்பாட்டை அரசு பல தடைகள் விதித்து கட்டுப்பாட்டில் வைத்து உள்ளது.
கஞ்சா பயன்படுத்துவது உணர்வுகளை முடுக்கி விட்டு ஒரு வித மயக்க உணர்வை ஏற்படுத்தும். இதனை பல கணினி மென்பொருள் பொறியியலாளர்கள் யோசனை நன்கு மேலோங்கி வருவதற்காக பயன்படுத்துவது உண்டு; பல சாதாரண மனிதர்கள் இதை பயன்படுத்தி விட்டு பிரச்சனைகள் பலவற்றை ஏற்படுத்துவது உண்டு. இது மேல்மட்ட மக்கள், கீழ்மட்ட மக்கள் என அனைவரும் பயன்படுத்தும் ஒரு போதை பொருளாக உள்ளது.
ஆண்களின் உடல்.
ஆண்களின் ஆண்மை.
ஆண்களின் உடலில் கஞ்சா பயன்படுத்துவதால் ஏற்படும் மாற்றங்கள் முக்கியமாக ஆண்மையை பாதிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கஞ்சாவை அதிகம் பயன்படுத்தும் ஆண்களின் உடலில் விந்து அணுக்களின் வடிவமும், அளவும் மாற்றம் அடைந்து அதன் செயல்பாடு அதிகம் பாதிப்பு அடைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தொடர்ந்த மாற்றம்.
கணினி அல்லது மொபைல் வீடியோ விளையாட்டுகளில், அனிமேஷன் முறையில் பொம்மைகள் தொடர்ந்து மாற்றம் அடைவது போல, ஆண்கள் அளவுக்கு அதிகமாக கஞ்சாவை பயன்படுத்துவதால், அவர்களின் உடலில் உள்ள விந்து அணுக்கள் கணினியில் வரும் அனிமேஷன் போல் மாறிக் கொண்டே இருக்கின்றனர். நிலைத்தன்மை இல்லாத விந்து அணுக்கள், இருந்தும் வீணே; இவற்றால் எந்த ஒரு பிரயோஜமான பயனும் ஏற்பட போவது இல்லை.
கருவுறுதல் கஷ்டம்!
நமது இலங்கைத் திருநாட்டில் அண்மைக்காலமாக அதிகளவான கேரள கஞ்சாக்கள் பிடிபட்டு அதனை வைத்திருந்தவர்களும் கைது செய்து சிறைத்தண்டனை பெற்று வருவது குறிப்பிடத் தக்கது.